அதிகாலையில் மார்கழி மாத ராமர் பஜனை: இளைஞர்கள் ஆர்வம்

ஜனவரி 03,2025



கூடலூர்; கூடலூர் கிராமங்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் ராமர் பஜனை ஊர்வலத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.


கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்கள், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ராமர் பஜனை நடத்தி வருகின்றனர். கிராமம் கோவில்களில் இருந்து இளைஞர்கள், பக்தியுடன் மார்கழி 1ம் தேதி, துவங்கி நாள்தோறும் அதிகாலை ராமர் விளக்கு ஏற்றி (கம்பம் விளக்கு) அதனை ஒவ்வொரு வீடுகளுக்கு எடுத்துச் சென்று, பூஜை பெற்று சூரிய உதயத்துக்கு முன் கோவிலுக்கு வந்தடைகின்றனர். பஜனை ஊர்வலத்தின் போது இளைஞர்கள் டோலாக் இசையுடன் ராமபிரான் குறித்த பக்தி பாடல்களை பாடி வருகின்றனர். அதிகாலையில் செல்ல முடியாத பகுதிகளுக்கு, மாலை சூரிய மறைவுக்கு பின் ராமர் விளக்கு எடுத்துச் சென்று பூஜை பெற்று வருகின்றனர்.


மார்கழி மாதம் முடிந்து, தை 1ம் தேதி பொங்கல் விழாவை முன்னிட்டு நிறைவு விழா நடைபெறும். அதில், பக்தர் கம்பம் விளக்கு ஏற்றி செல்ல அலங்கரிக்கப்பட்ட தேதியில் ராமாபுரம் ஊர்வலமாக வீடு வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை பெற்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 


மக்கள் கூறுகையில், கிராமப் பகுதி சேர்ந்த இளைஞர்கள் மார்கழி 1 தேதி முதல், அதிகாலை ராமர் பஜனை ஊர்வலத்தில் நடத்துவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர் வருகின்றனர். இதில் பங்கெடுக்க கூடிய இளைஞர்கள், பஜனை முடியும் காலத்தில் வரை சைவ உணவு சாப்பிடுவதுடன், கோவிலில் தங்கி ஊர்வலம் திரு பங்கேற்று வருகின்றனர். ஊர்வலத்தின் போது ராமர் புகழ் குறித்த பாடல்களை பாடி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றார்.


மார்கழி ஸ்பெஷல் 22; சர்ப்பதோஷம் தீர... மலைமண்டலப் பெருமாள்

மேலும்

திருப்பாவை பாடல் 23

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 3

மேலும்