ஸ்ரீரங்கம் பகல் பத்து ஐந்தாம் நாள்; அலைமோதிய பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்

ஜனவரி 04,2025



திருச்சி; ஸ்ரீரங்கம் பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் சௌரிக்கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் திருநாளான இன்று நம்பெருமாள் சௌரிக்கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய் பதக்கம், நெற்றிச்சரம், திருமார்பில் விமான பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், தொங்கல்பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், காசுமாலை, பின்புறம் புஜகீர்த்தி, அண்ட பேரண்டபக்ஷி பதக்கம் அணிந்து பல்லாக்கில் பிரகாரங்களில் திருவீதி உலா வந்தார். பின்னர் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்று மார்கழி மாத சனிக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


மார்கழி ஸ்பெஷல் 22; சர்ப்பதோஷம் தீர... மலைமண்டலப் பெருமாள்

மேலும்

திருப்பாவை பாடல் 23

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 3

மேலும்