திருப்பதி; திருப்பதியில் ஒரு மாதத்திற்குப் பிறகு சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்கியது.
மங்களகரமான தனுர்மாதம் டிசம்பர் 16ம் தேதி காலை 6:57 மணிக்கு தொடங்கியது. இதன் காரணமாக, டிசம்பர் 17ம் தேதி முதல் திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவைக்கு பதில் திருப்பாவை பாடப்பட்டு வந்தது. ஜனவரி 14ம் தேதி தனுர்மாசம் நிறைவடைந்ததை முன்னிட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு, இன்று (ஜனவரி 15) முதல் திருமலை கோவிலில் சுப்ரபாதம் - விழிப்பு சேவை மீண்டும் தொடங்கியது.