தென்திருப்பதியில் பரிவேட்டை; குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி



மேட்டுப்பாளையம்; தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில், பரிவேட்டை குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீ மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஜடையம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் உள்ளது. இங்கு இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோசாலையில் பராமரிக்கப்படும் பசுக்களுக்கு, பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின் மாடுகளுக்கு பொங்கல், பழங்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து காலை 9:30 மணியளவில் ஸ்ரீமலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ நாராயணகிரி பங்களாவில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து ஸ்ரீ மலையப்ப சாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டு பரிவேட்டை மைதானம் வந்தடைந்தார். அங்கு மலையப்ப சாமி பரிவட்டையில் ஈடுபட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மஞ்சுவிரட்டு நிகழ்வு நடைபெற்றன. இதற்கான ஏற்பாட்டினை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்