பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு



கோவை ; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன், சுவாமி தரிசனம் செய்தனர்.


கோட்டை ஈஸ்வரன் கோவிலில், நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகம் மாவிலை தோரணங்கள், கரும்புகள் கொண்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது. சங்கமேஸ்வரசுவாமிக்கு சகலதிரவிய அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள், குடும்ப சகிதமாக வழிபட்டனர்.


புலியகுளம் முந்திவிநாயகர் கோவிலில், பெரிய விநாயகர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


 பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில், 10,008 கரும்புகளால் வன அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில், மும்பெரும் தேவியருக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேவியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.


ஈச்சனாரி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு தங்கக்காப்பு சாற்றப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர்.


கோவை பீளமேடு புதுார் திருமகள் நகர், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில், 1,008 கரும்புகளை கொண்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவிலில் சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


கோவை கணபதி மாநகரில் உள்ள ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.


கோனியம்மன், தண்டுமாரியம்மன், கோட்டை மேடு கரிவரதராஜ பெருமாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், பேட்டை விஸ்வேஸ்வரசுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி கோவில்களில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்