பவனகிரி; கீழ்புவனகிரி நன்னைய ராமானுஜ கூடத்தில், ஆண்டாள் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது. கீழ் புவனகிரி நன்னைய ராமராஜர் கூடத்தில் ஆண்டுதோறும் திருப்பாவை உபன்யாயம் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை உபன்யாச திருப்பாவை நிறைவு நிகழ்ச்சி நடந்தது. மாலை திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருப்பாவை சாற்று முறை வைபவம், மாலை ஆண்டாள் திருக்கல்யான வைபவ நிகழ்ச்சியில் ஆண்டாள் சீர்வரிசைகளுடன் மாலை மாற்ற நிகழ்ச்சி ஹோமங்களுடனும், ஆண்டாள் கல்யாணத்தின் ஏற்றத்தை பேராசிரியர் கோகுலாச்சாரியார் எடுத்துரைத்தார். வைபவங்களை ஜெகதீசன் பட்டாச்சாரியார், பத்ரி பட்டாச்சாரியார் பரக்கலாம் பட்டாச்சாரியார் நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் சுற்று பகுதி பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சவுராஷ்டிரா சமூகத்தினர், ஆலய தரிசன அறக்கட்டளை செயலாளர் ஸ்ரீராம் செய்திருந்தனர். ராமானுஜ தாசர் நன்றி கூறினார்.