விடுமுறையால் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு



தேவிபட்டினம்; தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் பகுதியாக உள்ளன. இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் நவபாஷாணத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தற்போது கடற்கரை பகுதியில் இருந்து நவகிரகம் அமைந்துள்ள கடல் பகுதி வரை நடைமேடையின் மேல் கூரை அமைக்கப்பட்டுள்ளதால் வெயிலின்றி குளுமையாக உள்ளதன் காரணமாக மதிய நேரங்களிலும், சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் முகாமிட்டு தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்