ராமானுஜரின் 1008வது திருநட்சத்திர திருவிழா நிறைவு



பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் ராமானுஜரின், 1008வது திருநட்சத்திர தினத்தையொட்டி சிறப்பு பஜனை நடந்தது.


பெரியநாயக்கன்பாளையம் குப்புச்சிபாளையம் ரோட்டில் உள்ள உபகலையார் ராமானுஜர் கூடத்தில் ஸ்ரீ எம்பெருமானார் தர்சன ஐக்கிய சபா சார்பில் ராமானுஜரின் திரு நட்சத்திர திருவிழா நடந்தது. இங்கு விழாவை ஒட்டி ஸ்ரீ ராமானுஜர் மங்களகிரி வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, முத்துபந்தல், சேஷவாகனம், பல்லக்கு சேவை, அலங்கார பல்லக்கு, சர்வ பூபால வாகனம், ஆச்சாரியா விமானத்தில் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளில் சிறப்பு அலங்காரங்களில் ஸ்ரீ ராமானுஜர் எழுந்தருளி திருவீதி உலா கண்டார். முக்கிய நிகழ்வான திருநட்சத்திர திருவிழா நேற்று அதிகாலை, 4:00 மணி அளவில் தொடங்கியது. முதலில் கரி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு ஆராதனைகள் நடந்தன. பின்னர், கரிவரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, ராமானுஜர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, அவருக்கு எதிர்சேவை சாதித்தார். மாலை, 5:00 மணிக்கு திருவீதி உலா நடந்தது. பின்னர், உபகலையார் கூடத்தில் ராமானுஜர் எழுந்தருளினார். அங்கு கந்தபடி உற்சவம், நெய் தீப ஊர்வலம், ஊஞ்சல் சேவை, அன்னதானம், தேவையம்பாளையம் கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் திவ்ய பிரபந்த பஜனையுடன் ராமானுஜரின் திருநட்சத்திர திருவிழா நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்