‘சேலத்தில் திருவையாறு’; பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடிய இசைக்கலைஞர்கள்



சேலம்; சேலம் சங்கீத வித்வத் சபா சார்பில், ‘சேலத்தில் திருவையாறு’ பெயரில் நேற்று நிகழ்ச்சி தொடங்கியது. அதில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின், 178ம் ஆண்டு ஆராதனை விழா இன்று நடந்தது. காலையில் வெங்கடேஷன் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள், பஞ்ச ரத்ன கீர்த்தனையை, கோஷ்டி கானமாக இசைத்து, தியாகராஜ சுவாமிகளுக்கு சமர்ப்பித்தனர். தொடர்ந்து விஜயலட்சுமி கண்ணன் குழுவினரால், சத்குருவின் உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகளை பாடப்பட்டன. மாலையில் ராஜா அரங்கநாதன், சுவேதா, பத்மினி கேசவகுமார், ராஜேஸ்வரி உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்