ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் அக்னி வெயில் சுட்டெரிப்பதால் கோயில் வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் யானை ராமலட்சுமி உற்சாகமாக குளித்து விளையாடியது. தமிழகத்தில் அக்னி வெயில் துவங்கியதால் வெப்ப சலனத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். இதில் கடலோர பகுதியான ராமேஸ்வரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் யானை ராமலட்சுமி உற்சாகமாக குளித்து விளையாடி வெப்ப சலனத்தை தணித்தது. இனிவரும் நாளில் கோயில் யானையை வாரம் 2 முதல் 3 நாள்கள் வரை குளிக்க வைத்து வெப்ப சலனத்தை தணிக்க இயற்கை சார்ந்த சூழலை ஏற்படும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.