பிரான்மலை; பிரான்மலையில் குயிலமுதநாயகி திருக்கொடுங்குன்றநாதர் திருக்கல்யாணம் மே 5ல் நடக்கிறது.
பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரிய இக்கோயில் குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்டது. இக்கோயிலின் சித்திரைத் திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்தாம் நாளான மே 5ம் தேதி காலை 9:30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் சமணர்களுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. சுவாமி யானை வாகனத்திலும் அம்மன் பல்லக்கிலும் திருவீதி உலா வருகின்றனர். ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனம் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.