சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்



கடலுார்; சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.


கடலுார் அடுத்த சிங்கிரிகுடியில் பிரசித்திப் பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் லட்சுமி நரசிம்மர் கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவ விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 6ம் தேதி நாக வாகனத்தில் சாமி புறப்பாடு, 7ம் தேதி கருட சேவை, 11ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. உற்சவ நாாட்களில் தினசரி காலை பல்லக்கில் வீதி புறப்பாடு, இரவில் வாகனங்களில் புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வேல்விழி மற்றும் சிங்கிரிகுடி கிராமத்தினர், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்