பரமக்குடி வைகையில் விடிய விடிய தசாவதார சேவை; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்



பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார சேவையில் அருள்பாலித்தார்.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா விமரிசையாக நடக்கிறது. மே 7ல் காப்பு கட்டுடன் விழா துவக்கி, மே 12 அதிகாலை 3:20 மணிக்கு வைகையில் அழகர் இறங்கினார். 9:30 மணிக்கு குதிரை வாகனத்தில் செண்பகப்பூ, மகிழம்பூ, ஏலக்காய், தாமரை மலர்கள் சூடி அலங்காரமாகிய அழகருக்கு பல்லாயிரம் பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். தொடர்ந்து இரவு வண்டியூர் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பெருமாள் கோயிலை அடைந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் அனைத்து வகையான பிரசாதங்களையும் வழங்கினர்.


நேற்று இரவு சேஷ வாகனத்தில் பரமபதநாதனாக எழுந்தருளினார். அப்போது மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து, வாணியர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதார காட்சி அளித்தார். அப்போது அர்ச்சாவதாரம், மச்சம், கூர்மம், வாமன, பரசுராம, பலராம, கிருஷ்ணாவதாரம் மற்றும் மோகினி அவதாரங்களில் எழுந்தருளினார். வைகையில் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தரிசித்தனர். இதன்படி இரவு 12:00 மணிக்கு துவங்கிய தசாவதார சேவை காலை 6:30 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து காலை 11:00 மணி முதல் சந்தனம், தயிர், பால், பஞ்சாமிர்தம் என பலவகையான அபிஷேகங்கள் நடந்து, மகாதீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்