காரைக்கால்; காரைக்காலில் மேலகாசாகுடி பத்ரகாளியம்மன் கோவிலில் மஹோத்ஸவப் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் மேலகாசாக்குடி பகுதியில் உள்ள ஸ்ரீ மல்லிகேஸ்வரி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் மஹோத்ஸவப் திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி ஸ்ரீ மல்லிகேஸ்வரி மாரியம்மன் பூ அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு பூச்செறிதல் மற்றும் காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.வரும் 27ம் தேதி காவடி எடுத்தல். கும்ப பூஜை.அக்னி கப்பறை.வரும் 28ம் தேதி காளியம்மன் வீதியுலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகி தலைவர் ரவி.உ.ப.தலைவர்கள் விஜயகுமார். மகேஷ். உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பத்ரகாளியம்மன் தரிசனம் மேற்கொண்டனர்.