பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா மே 11ல் துவங்கியது. 5 நாட்கள் நடக்கும் விழாவில் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மே 12 இரண்டாம் நாள் முக்கிய விழாவில் வரதராஜப் பெருமாள் கள்ளழகராக வீதி உலா வந்தார். நேற்று 4 ம் நாள் விழாவில் உற்ஸவர் வரதராஜப் பெருமாள் கருட வாகனம் மற்றும் மச்சஅவதாரம், கூர்மவதாரத்தில் எழுந்தருளினார்.இன்று திருவிழா நிறைவு பெறுகிறது.