காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மொபைல் போனுக்கு தடை



காஞ்சிபுரம்; ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது மொபைல் போனை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்காக, ‘டிஜிட்டல் லாக்கர்’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர் கூறியதாவது: கோவிலுக்குள் மொபைல் போனை எடுத்துச் செல்லக்கூடாது என ஐகோர்ட் ஆர்டர் உள்ளது. அதன்படி, காமாட்சியம்மன் கோவிலுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது மொபைல் போனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ‘டிஜிட்டல் லாக்கர்’ வசதி துவக்கப்பட்டுள்ளது. ‘கோவில் கிழக்கு கோபுர வாசல் மற்றும் வடக்கு கோபுர வாசல் அருகில் உள்ள, ‘டிஜிட்டல் லாக்கரில்’ உள்ள, ‘க்யூ.ஆர்.,’ கோர்டை தங்களது மொபைல்போன் வாயிலாக ஸ்கேன் செய்து, தங்களது மொபைல் எண் மற்றும் நான்கு இலக்கம் கொண்ட எளிமையான தற்காலிக பாஸ்வேர்டை உருவாக்கியபின், லாக்கர் தானாக திறக்கும். அதில், மொபைல் போனை வைத்துவிட்டு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்ததும், டிஜிட்டல் திரையில், தங்களது மொபைல் எண் மற்றும் ஏற்கெனவே உருவாக்கிய நான்கு இலக்கம் கொண்ட தற்காலிக பாஸ்வேர்டை பதிவிட்டதும், லாக்கர் தானாக திறக்கும். அப்போது மொபைல் போனை எடுத்து கொள்ளலாம். ஒரு மொபைல்போனை ‘டிஜிட்டல் லாக்கரில்’ வைத்துவிட்டு செல்வதற்காகன 10 ரூபாய் கட்டணத்தை, ’க்யூ.ஆர்.’ கோடு வாயிலாகவே செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் 1,000 பேர் வரை இந்த வசதியை பயன்படுத்தும் வகையில், ‘டிஜிட்டல் லாக்கர்’ வசதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்