நரசிம்மநாயக்கன்பாளையம் செல்வ மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா



பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகரில் செல்வ மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா கடந்த, 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 9ம் தேதி கணபதி ஹோமம், தொடர்ந்து, சக்தி அழைத்தல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம், அம்மன் அழைத்தல், செல்வமாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு கரகம் அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், அக்னி கரகம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நன்னீராட்டு விழா நடக்கிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு மறு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அனைத்து நகர பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்