ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம்



ராமநாதபுரம்; ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ  விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது.


ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட கோதண்டராமசுவாமி கோயிலில் ஜூன் 5 முதல்  ஜூலை 6 வரை ஆனி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் பல்லக்கு மற்றும் இரவில் சிம்மம், ஆஞ்சநேயர், சேஷ உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (ஜூலை 2) இரவு  கோதண்ட ராமசுவாமி, சீதா தேவி திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுரகர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இன்று இந்திர விமான புஷ்ப பல்லக்கில் சுவாமி உலா நடந்தது.  நாளை  (ஜூலை 4 ) இரவு குதிரை வாகனம்,  ஜூலை 5 காலை ரதோற்ஸவம்,  ஜூலை 6ல் தீர்த்தோற்ஸவம், இரவு தோளுக்கினியன் வாகனத்தில் சுவாமி எழுந்தருளுவதுடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவு பெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்