குன்றத்துார் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் விமரிசை



குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. குன்றத்துார் அருகே உள்ள சோமங்கலம் பகுதியில், 900 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சவுந்தரவல்லி தாயார் உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆனி மாதம் அஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று மாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை, கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்