ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது. இன்று காலை 6:30 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட பெரியாழ்வார் செப்பு தேருக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. திரளான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோசமிட்டவாறே தேரை இழுத்தனர். சுமார் 50 நிமிடத்தில் ரதவீதிகள் சுற்றி வந்து தேர் நிலையம் சேர்ந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி.ராஜா தலைமையில் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.