சிருங்கேரி சுவாமிகள் ராமேஸ்வரம் விஜயம்; திருசெந்தூர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார்



சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 மணிக்கு மதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் விஜயம் செய்ய உள்ளார். தொடர்ந்து கோவில் மூன்றாம் பிராகாரத்தில் ஸ்ரீ சாரதா சந்த்ர மௌலீஸ்வர பூஜை செய்கிறார்.


கி பி 788-820 ல் வாழ்ந்த ஆதி சங்கரர் இந்தியாவின் நான்கு ஆம்னாய பீடங்களை முறையே தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம், பத்ரிநாத் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான சுரேஷ்வரர், அஸ்தாமலகர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் பீடாதிபதிகளாக நியமித்தார். காஷ்மீரத்தில் சர்வஞ்ஞ பீடம் ஏறி தமது 32வது வயதில் கேதாரத்தில் இறைவனோடு கலந்தார். தென் திசையில் நிறுவிய சிருங்கேரி சாரதா பீடத்திற்கு இராமேஸ்வரத்தை க்ஷேத்ரம் ஆக ஆதிசங்கரர் ஏற்படுத்தியுள்ளார் என்பது சுமார் ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கும் மேலாக இத் திருக்கோயிலுக்கு ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்துடன் உள்ள நீடித்த தொடர்பை உணர்த்துகின்றது. 


இத் திருக்கோவிலில் ஆதிசங்கரர் காலம் தொட்டு பூஜிக்கப்பட்டு வரும் ஸ்படிக லிங்கமும் அதற்கு செய்யப்படும் அதிகாலை அபிஷேகமும் மிக சிறப்பு மிக்கதாகும். திருக்கோவில் கருவறைக்குள் சென்று ஸ்ரீ ராம நாத சுவாமி மூலவருக்கு பூஜை செய்வதற்கு சிருங்கேரி ஜகத்குருவிடம் மந்திர உபதேசம், சிவதீக்ஷை பெற்ற ராமேஸ்வரம் வாழ் மராத்திய அந்தண குடும்பத்தை சேர்ந்தவர்கள், சிருங்கேரி சுவாமிகள் மற்றும் நேபாள் மன்னர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரிமை உண்டு. ராமேஸ்வரம் வரும் சுவாமிகளுக்கு சிருங்கேரி மடத்தில் தூளிபாத பூஜை நிகழ்த்தப்பட்ட பின், இரவு 8 மணிக்கு கோவில் மூன்றாம் பிராகாரத்தில் ஸ்ரீ சாரதா சந்த்ர மௌலீஸ்வர பூஜை நிகழ்த்துகிறார். ஞாயிறு காலை சுவாமி தரிசனம் செய்த பின், மாலை திருசெந்தூர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்