திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி பூஜை விழா



நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனிமாத பவுர்ணமி பூஜை விழா நடந்தது. இதையொட்டி முருகப் பெருமானுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதைப் போலவே நத்தம் மாரியம்மன் கோவில், கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், குட்டூர் அண்ணாமலையார் கோவில்,அக்ரஹாரம் வாராஹி அம்மன் கோவில்,அசோக்நகர் பகவதி அம்மன் கோவில், மீனாட்சிபுரம் காளியம்மன், கர்ணம் தெரு மதுரகாளியம்மன் கோவில்களிலும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்