சுருட்டுப் பள்ளி பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை



காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரம் மண்டலம் சுருட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் சர்வமங்கள சமேத பள்ளிகொண்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ  பூஜைகள் மிகவும் சிறப்பாக நடந்தன. கோயில் வளாகத்தில்நந்தீஸ்வர ஸ்வாமிக்கும், வால்மீகேஸ்வர ஸ்வாமிக்கும் ஏக காலத்தில் பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக பால் , தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்கு பின்னர் பின்னர் சுவாமி அம்மையார்கள் மற்றும் பிரதோஷ நந்தீஸ்வர சுவாமி அவர்களை பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யட்டு தீப, தூப  நெய்வேத்யங்கள் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்