கோவில் பூட்டியதால் காரைக்கால் அம்மையாருக்கு சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்ச்சி தாமதம்



காரைக்கால்; காரைக்கால் அம்மையாருக்கு சீர்வரிசை எடுத்த செல்லும் நிகழ்ச்சியில் இருதரப்பினர்களுக்கு இடையோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கோவில் பூட்டியதை கண்டித்து சீர்வரிசையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.


காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் மாங்கனி திருவிழா கடந்த 8ம் தேதி மாப்பிளை அழைப்புடன் தொடங்கியது. கடந்த 9ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் சிவபெருமான் காவியுடைருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா நடந்தது. அப்போது மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடந்தது.இரவு அமுது படையல் நிகழ்ச்சி நடந்தது. பரமதத்தர் கப்பலேறி பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்பொழுது நேற்று இரவு 11மணிக்கு காரைக்கால் அம்மையார் புஷ்ப பல்லக்கு செல்லும் நிகழ்ச்சி வலத்தெரு ஸ்ரீ தெஷ்ணமுத்து மாரியம்மன் கோவிலிருந்து நாடார் சங்கத்தினர் சீர்வரிசை எடுத்து சென்று அம்மையாரை புஷ்ப பல்லக்கில் ஏற்றி வீதியுலா நடத்துவது வழக்கம்.ஆனால் நாடார் சங்கத்தினர் சீர்வரிசை எடுக்க கோவிலுக்கு சென்ற போது மற்றொரு பிரிவினர் கோவிலை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அம்மையாருக்கு சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்ச்சி தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காங், தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் இளைஞர் காங்,கட்சி மாவட்ட தலைவர் ரஞ்சித் மற்றும் தி.மு.க. பிரமுகர் விவசாய அணி அமைப்பாளர் பிரபு ஆகியோர் தலைமையில் சீர்வரிசையுடன் கோவில் வாசல் முன்பு நாடார் சங்கத்தினர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் தகவல் அறிந்த வட்டாட்சியர் செல்லமுத்து தர்மாவில் ஈடுப்பட்ட நபர்களிடம் இரு பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்சனை காரணமாக திருவிழா தடைப்படக்கூடாது எனவும் நீங்கள் சீர்வரிசை எடுத்து செல்லுமாறு அகிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நாடார் சங்கத்தினர் கோவில் வாசலில் வைத்து சீர்வரிசையை எடுத்து சென்றனர். இருதரப்பினர்களுக்கு இடையோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அம்மையார் புஷ்ப பல்லக்கில் பாண்டிய நாடு செல்லும் நிகழ்ச்சிக்கு சீர்வரிசை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி தாமதமானதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்