சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்



காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது.


சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா கடந்த ஜூலை 4ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும், சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 63 நாயன்மார் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடந்தது. நேற்று காலை வீரசேகர பிரியாவிடை உமையாம்பிகை தாயார், விநாயகர் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. விநாயகர் தேர் முதலில் வர தொடர்ந்து வீரசேகர பிரியாவிடை தேரும், உமையாம்பிகை தேரும் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்