அரியகுடிபுத்தூர் மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்



பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

அரியகுடிபுத்தூரில் சிவ சக்தி ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இங்கு பேச்சி அம்மன், பகவதி அம்மன், கருப்பண்ணசாமி சன்னதிகள் உள்ளன. ஜூலை 11 காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி, இரவு முதல் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி நடந்தது. ஜூலை 12 காலை, மாலை 2 மற்றும் 3ம் காலையாக சாலை பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. இன்று காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன், 4ம் கால மகா பூர்ணாகுதி நடந்தது. காலை 10:15 மணிக்கு தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, விமானத்தை அடைந்தது. பின்னர் கோபுர கலசங்கள் மற்றும் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தீபாரதனைக்கு பின் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன. கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்