திருமலையில் சேரும் குப்பையில் இருந்து பயோ கேஸ்; பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்



திருமலை; திருமலை குப்பை சேகரிப்பு  தளத்திற்கு அருகில் ரூ. 12.05 கோடி செலவில் பயோகேஸ் பிளாண்ட் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் உருவாகும் 55 டன் ஈரக் கழிவுகளில் இருந்து சுமார் 40 டன் கழிவுகளை ஐஒசிஎல்.,சீர் செய்து அதில் இருந்து தினமும் 1,000 கிலோ பயோகேஸ் உற்பத்தி செய்யும் என ஐஒசிஎல் மார்க்கெட்டிங் டைரக்டர்  சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். திருமலை வெளிச்சுற்று சாலையில்  45 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய எல்பிஜி  எரிவாயு சேமிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் தேவஸ்தானத்தின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யப்படும். லட்டு பிரசாதம் தயாரிப்புக்கும், இலவச உணவுக்கான சமையலுக்கும் பயன்படும் கூடுதல் கேஸ் பயன்படுத்தப்படும்.இதன் மூலம் வருடத்திற்கு சுமார் ரூ. 1.50 கோடி சேமிப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐஒசிஎல் மார்க்கெட்டிங் டைரக்டர்  சதீஷ்குமார் கூறுகையில்; திருமலை குப்பை கொட்டும் இடத்தில் ஏற்கனவே 12.05 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தினமும் பெறப்படும் 55 டன் ஈரக் கழிவுகளில் 40 டன் ஐஓசிஎல் ஆலைக்கு மாற்றப்படும் என்றும், ஒரு நாளைக்கு 1000 கிலோ பயோகேஸ் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆலையில் 45 மெட்ரிக் டன் மவுண்டட் சேமிப்பு பாத்திரங்கள், 1500 கிலோ ஆவியாக்கி, தீயை அணைக்கும் அமைப்பு, தெளிப்பான் அமைப்பு, இரண்டு தண்ணீர் தொட்டிகள், டீசல் ஜெனரேட்டர் செட், ரிமோட் ஆப்பரேட்டிங் வால்வுகள், கேஸ் கசிவு அலாரம், டேங்க் லாரி டிகாண்டேஷன் சிஸ்டம், சிசிடிவி, ஜிஎம்எஸ், டிஎஃப்எம்எஸ், ஐஎல்எஸ்டி மற்றும் பிற அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அலுவலர் சத்யநாராயணா, சுப்பிரமணியம், சுதாகர், சந்திரசேகர் மற்றும் பிற தேவஸ்தான மற்றும் ஐஓசிஎல் அதிகாரிகள் பங்கேற்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்