சின்னசேலம்; சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு 108 வெள்ளி வேல் வைத்து வேல்மாறல் பூஜை நடந்தது. வேல்மாறல் பூஜை என்பது முருகப் பெருமானின் வேல் வடிவத்தை போற்றி செய்யும் சிறப்பு பூஜையாகும். இந்த பூஜை, நோய்கள் நீங்கவும், வாழ்வில் வளம் பெறவும் செய்யப்படுகிறது. ஆர்ய வைசிய மகிளா விபாக் மற்றும் ஆர்ய வைசிய சமூகத்தினர்கள் இணைந்து கோவிலில் முருகன் சன்னதி முன் 108 வெள்ளி வேல்களை அமைத்து, 108 முறை சஷ்டி பாராயணம் செய்து, வேல்மாறல் பூஜைகள் நடத்தப்பட்டது.