விருத்தாசலம்; விருத்தாசலம் செங்கழனி மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் ஏராளமானோர் செடல் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம், பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில், 43வது ஆண்டு ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 20ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை மணிமுக்காற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (2ம் தேதி) காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 10:00 மணிக்கு மணிமுக்தாற்றில் இருந்து கஞ்சி கலயம் சும்ந்து ஏராளமான பெண்கள் ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். 3ம் தேதி ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து செங்கழனி மாரியம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வந்து, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.