பாண்டியராஜாவாக கலந்து கொள்ள மதுரைக்கு புறப்பட்ட திருப்பரங்குன்றம் முருகன்



திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் ஆவணி மூல திருவிழாவில் பாண்டியராஜாவாக கலந்து கொள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து இன்று புறப்படாகினார்.

கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பணசுவாமிக்கு பூஜை முடிந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. தீபாராதனைக்கு பின்பு சர்வ அலங்காரத்தில் தங்க பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி வழி நெடுகிலும் பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் அருள்பாளித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றனர். அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது‌. இரவு நரியை பரியாக்கும் நிகழ்ச்சியில் மதுரை சுவாமிகளுடன் குன்றத்து சுவாமிகள் பங்கேற்றனர்.

செப். 6ல் ஆடி வீதிகளில் உலா நிகழ்ச்சி முடிந்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை விடைபெறும் நிகழ்ச்சி நடக்கும். செப். 7ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பு, பூஜை வழக்கம் போல் நடக்கும்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்