சரஸ்வதி பூஜை; கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் குவிந்த பக்தர்கள்



திருவாரூர்; கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காலைஸ்ரீஅம்பாள் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து ஸ்ரீபாத தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


கூத்தனூர் சரஸ்வதி தலம் "ஞான பீடம் என்றும் "தெட்சிண திரிவேணி சங்கமம் என்றும் புகழ்பெற்றது. மூலவர் சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். தென் இந்தியாவிலேயே கல்வி தெய்வமான சரஸ்வதி அம்மனுக்கான தனி கோயில் இது தான். கல்விக்கடவுளான சரஸ்வதியை முறைப்படி மனதார வணங்குபவருக்கு தேனும் பாலும் திராட்சையும் போன்ற இனிய சொற்கள் சித்திக்கப்பெறும். அத்துடன் காவிய நாயகனாகவும் திகழ்வார். சிறப்பு மிக்க இக்கோயிலில் இன்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு  சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, காத்திருந்து அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்