திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோச்சவம்



திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோசவ விழா துவங்கி நடந்து வருகிறது.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோச்சவ விழா நேற்று துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு நித்திய கால பூஜை, 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேததேகளிச பெருமாள், புஷ்பவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் யாகசாலையில் எழுந்தருளினர். அக்னி பிரதிஷ்டை, கலச ஸ்தாபனம், பெருமாளுக்கு பவித்ர மாலை சமர்ப்பித்தல், பூர்ணாகுதி, சாற்றுமறை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுதர்சன ஹோமம், பிரதான ஹோமங்கள், மகா சாந்தி ஹோமம், பூர்ணாகுதி, சாற்றுமறை நடந்தது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், தேகளீச சுவாமி பக்த ஜனா சபா ஏற்பாட்டில், பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க விழா நடந்தது. வரும் 6ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக அன்று மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு புஷ்ப யாகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பவர் ஏஜென்ட் கோலாகளன் செய்து வருகிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றன.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்