ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையினால் அக்டோபர் 21 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோயிலில் நாளை (அக். 18ல்) ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு, அக். 20 தீபாவளி தினத்தன்று அமாவாசை வழிபாடு நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் இன்று (அக்டோபர் 17)முதல் அக்டோபர் 21 வரை 5 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் தாணிப்பாறை அடிவாரம் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.