தீபாவளிக்கு அடுத்த நாள் மயிலந்தீபாவளிக்கு ஏற்பாடு



கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடசித்தூரில் மயிலந்தீபாவளி கொண்டாட முன்னேற்பாடு தீவிரமாக நடக்கிறது.


கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே, வடசித்தூர் கிராமத்தில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள், மயிலந்தீபாவளி கொண்டாடப்படுகிறது. இப்பகுதியில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் வசிப்பதால், ஹிந்துக்கள் மயிலந்தீபாவளியை இஸ்லாமிய மக்களோடு இணைந்து கொண்டாடி அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மயிலந்தீபாவளி நிகழ்ச்சியில், வடசித்தூர் சுற்றுபகுதியில் உள்ள கிராம மக்கள் பலர் பங்கேற்று கொண்டாடுவார்கள். அதேபோன்று சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து வெளியூருக்கு திருமணமாகி சென்ற பெண்கள், குடும்பத்துடன் மயிலந்தீபாவளி பண்டிகையில் பங்கேற்பர். இதில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வார்கள். தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் (21ம் தேதி) மயிலந்தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக, வடசித்தூர் ஊராட்சி அலுவலகம் அருகே, ராட்டிணம் உள்ளிட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. மேலும், இங்கு ரோட்டோரத்தில் இருபக்கமும் விளையாட்டு பொருட்கள், பொம்மை, பலூன் கடைகள் மற்றும் உணவகங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்