திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நாளை வேலுக்கு அபிஷேகம் இல்லை



திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு பக்தர்கள் கொண்டுவரும் பால் நாளை (அக். 17) மட்டும் அபிஷேகம் செய்யப்படாது. கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி மலையின் அடிவாரத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கொண்டுவரும் பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட அனைத்து அபிஷேகங்களும் மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கே நடக்கிறது. நாளை காலையில் வேல், மலைமேல் கொண்டு செல்லப்பட்டு சுனை தீர்த்தத்தில் அபிஷேகங்கள் நடக்கும். மீண்டும் இரவு மூலவர் கரத்தில் வேல் சேர்பிக்கப்படும். அதனால் இன்று மட்டும் பக்தர்கள் கொண்டுவரும் பால் வேலுக்கு அபிஷேகம் நடக்காது. கோயில் நடை திறப்பு, பூஜை வழக்கம்போல் நடக்கும்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்