பேரூர், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அன்னாபிஷேகம்



தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், அன்னாபிஷேகம் நடந்தது.


ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளான இன்று சிவன் கோவில்களில், அன்னாபிஷேகம் நடந்தது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில், இன்று மாலை 4:00 மணிக்கு, பட்டீஸ்வரருக்கு சாயரட்ச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 25 கிலோ சாதம் மற்றும் காய்கறிகள் கொண்டு, பட்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, மஹாதீபாராதனை நடந்தது. அதேபோல, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், 50 கிலோ சாதம் கொண்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அதேபோல, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்