பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் கணபதி கற்கோவில் கும்பாபிஷேக விழா



கள்ளக்குறிச்சி: பாசார் கிராமத்தில் மரகதாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அருள்ஞான கணபதி கற்கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் அடுத்த பாசார் கிராம மரகதாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அருள்ஞான கணபதி கற்கோவில் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஆதிஞான கணபதி, பாறை கால பைரவர், திருக்குள நான்முகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா துவங்கியது. வேள்வி பூஜைகள், தீர்த்த குடங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சி மற்றும் தெய்வத்திருமேனிகளை பீடத்தில் வைத்து, எண் வகை மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று முன்தினம் காலை அருள்ஞான கணபதி கற்கோவில் கும்ப கலசதிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் சிவபாலா மற்றும் ஓதுவார்கள் ரமேஷ், குருநாதன் ஆகியோர் செய்து வைத்தனர். தொடர்ந்து கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வத்திருமேனிகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தொண்டரடிப்படி திருக்கூட்டத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்