கோவை; ஐப்பசி மாதம் மூன்றாவது வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ரோடில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மஞ்சள் காப்புஅலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஐப்பசி மாதம் மூன்றாவது வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராக ராஜ அலங்காரத்தில் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.