திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மன் சண்டி யாகம் நிறைவு



திருப்பதி; திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக நடைபெற்ற சண்டி யாகம் நிறைவடைந்தது.


திருப்பதி கபில தீா்த்தத்தில் கால ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக அக்30ம் தேதி முதல் நேற்று வரை வரை சண்டி யாகம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று யாக சாலையில் மகா பூா்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா அபிஷேகம், முன்னோா்களுக்கு கலசாபிஷேகம், சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து பூா்ணாஹுதியுடன் சண்டி யாகம் நிறைவடைந்து. இன்று காலை ருத்ர யாகத்திற்காக கபிலேஸ்வர சுவாமிக்கு கலச நிறுவப்பட்டு, பூஜை, ஜபம், ஹோமம், ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. விழாவில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்