பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை மலையடிவாரத்தில் புதிய தோரண வாயில் திறப்பு விழா 10ம் தேதி நடக்கிறது.
கோவை வடக்கு பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. ராமானுஜர் வருகை தந்த சிறப்பு பெற்ற இக்கோவில் மலையடிவாரத்தில், 10 லட்ச ரூபாய் செலவில் புதிய தோரண வாயில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா 10ம் தேதி காலை, 9.00 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் பாலமலை ரங்கநாதர் திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீஷ் தலைமையில் நடந்து வருகிறது.