கண்ணன்தாங்கல்; கண்ணன்தாங்கல், 108 சக்தி பீடத்தில் முப்பெரும் விழா இன்று நடந்தது.
மதுரமங்கலம் அடுத்த, கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீடம் என அழைக்கப்படும், ஸ்வர்ண காமாட்சி கோவில் உள்ளது. உலக நன்மை வேண்டி, 108 கலசங்களுக்கு இன்று காலை, 8:00 மணி அளவில் யாக சாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்று மதியம் 1:00 மணி அளவில் 108 அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதையடுத்து, 108 சக்தி கோவில்களில், அபிராமி அந்தாதி மற்றும் துர்கா பஞ்சரத்னத்தை பல்வேறு நாடுகளில் இருந்து வந்த சுமங்கலி பெண்கள் பாராயணம் செய்தனர். மேலும், லலிதா சகஸ்ரநாமம் பாரயணம் செய்தனர்.