22-டிசம்பர்-2025
புதுச்சேரி: தேசமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி நடந்தது. உப்பளம், நேத்தாஜி நகரில், தேசமுத்து மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத ஸ்ரீ ஹரி ஹரி பஜனை நிகழ்ச்சி கடந்த 16ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. நேற்று காலை 5:30 மணிக்கு பஜனை புறப்பட்டது. தொடர்ந்து காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீ பாராதனை நடந்தது. உபயதாரர்களாக சிவா சவுந்தரம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.