ஸ்வரத்தில் இன்னிசை பூரிக்க வைத்த பூஜா

22-டிசம்பர்-2025



குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவி கர்நாடக இசைக் கலைஞர் பூஜா சுரேஷ். இவர், மந்தாரி வர்ணம், ஆதி தாளம், திஸ்ர நடையில் அமைத்து, தன் கச்சேரியை துவக்கினார்.


அடுத்து, ‘ஓங்கி உலகளந்த’ என்ற ஆண்டாள் திருப்பாவையை, ஸ்வரத்தில் தொடுத்து ரசிகர்களுக்கு இன்னிசையை பரிமாறினார். தியாகராஜர் இயற்றிய, ‘எந்த நின்னே வர்ணிந்து’ கீர்த்தனையை, முகாரியில் பாடி, ரூபக தாளத்தில் நிரவல் செய்து, ரசிகர்களின் உள்ளங்களை நிரப்பினார். அடுத்து, ‘கமலசரனே’ கீர்த்தனையை, அம்ரித பெஹாக் ராகம், ஆதி தாளத்தில் பாடி, இதமான உணர்வை, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவன் அரங்கில் கொண்டு வந்தார். தொடர்ந்து, தியாகராஜரின் ‘நன்னு பாலிம்பா’ கீர்த்தனையை முக்கிய உருப்படியாக எடுத்தது, தன் அனுபவத்தை காட்டியது. இதில், ஸ்வரம் மற்றும் கோர்வைகளை நேர்த்தியாக கையாண்டது சிறப்பு. இறுதியாக, காஞ்சி மகாபெரியவரை போற்றும் வகையில், ‘கருணாரஸ’ கீர்த்தனையை, யமுனா கல்யாணி ராகத்தில் பாடி பூரிப்பில் ஆழ்த்தினார். வயலின் கலைஞர் காயத்ரி வரேன்யா, மிருதங்கம் கலைஞர் பிரேம் கிருஷ்ணன் தனியாவர்த்தனத்தில் சிறப்பு சேர்த்தனர். கர்நாடக இசைக் கலைஞர் சங்கீதா சிவகுமார் மற்றும் வீணை கலைஞர் வசந்த்குமார் ஆகியோர், பூஜாவின் ஆரம்பகால குருக்களாவர். பூஜா, தன் இசை புலமைக்கு பல விருதுகளை பெற்றுள்ளார். – நமது நிருபர் –: 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்