20-டிசம்பர்-2025
அவிநாசி: அவிநாசியிலுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி பெருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.
காலை ஆஞ்சநேய சுவாமிக்கு மஹா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, குன்னுார் – உபதலை சுவாமி ஸ்ரீ மேக்நாத் சாய்சாய் நிவாஸின் திவ்ய நாம சங்கீத பக்தி பஜனை மற்றும் ஸ்ரீ தத்வன சைதன்ய சுவாமிஜியின் ஸ்ரீ அருணாச்சல மஹிமா குழுவினரின் பக்தி இசை ஞான சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து ராமதுாதனாகிய ஸ்ரீஅனுமன், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியுடன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.