அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள திருப்புக்கொளியூர் அவிநாசி ஸ்ரீ வாகீசர் மடாலயத்தில், ஸ்ரீஸ்ரீ வேத ஆகம ஆய்வு நிறுவனம், சம்பந்த சிவாச்சார்யார் சிவாகம சம்சோதன சபை மற்றும் ஸ்ரீ வாகீசர் மடாலயம் இணைந்து, சிவாலய சைவாகம பூஜாக்ரம பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன. முகாமின், 3ம் நாளான நேற்று சிவபுராண பாராயணம் நடைபெற்றது. கார்த்திகேய சிவம் வரவேற்றார். பெங்களூரு வேத ஆகம சம்ஸ்க்ருத பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் ஆசியூரை வழங்கினார். கூனம்பட்டி திருமடம் நடராஜ சிவாச்சார்யார் அனுக்ரஹபாஷனம் வழங்கினார். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆரூர சுப்பிரமணிய சிவம் வாழ்த்துரை வழங்கினார். மதுரை விவேக பட்டரின் சிறப்புரை நடைபெற்றது. இதில், ஆத்மார்த்த நித்ய பூஜை விதியில் உள்ள விஷயங்களை மிக விரிவாகவும், எளிதாகவும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. குளித்தலை சிவஸ்ரீ ஆனந்தசிவம் நித்ய பூஜா அர்ச்சனா விதியை பற்றியும்,அருள்நந்தி சிவம் பஞ்சபர்வங்கள் மற்றும் நடராஜரின் அபிஷேகங்களில் உள்ள விஷயங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.