திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் கணபதி ஹோமம்



திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் தபோவனம் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் 52 வது ஆண்டு ஆராதனை விழாவின் 4ம் நாளான இன்று கணபதி ஹோமத்துடன் சிறப்பு வழிபாடுகள் துவங்கியது. திருக்கோவிலூர், தபோவனம், ஞானானந்தகிரி சுவாமிகளின் 52 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை மகா கணபதி ஹோமம், தொடர்ந்து அதிஷ்டத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சோடசோபோவுபச்சார தீபாராதனை நடந்தது. இன்று காலை ஸ்ரீவித்யா கடஸ்தாபனம், சண்டி பாராயணம், நவாவரண பூஜை, நவக்கிரக ஹோமம், நவக்கிரக மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, அதிர்ஷ்டத்தில் லச்சார்ச்சனை துவங்கி ஆராதனை தினமான ஜனவரி 4ம் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்