ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷனர் பானு பிரகாஷ் யத்ரு, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை மதுரையில் இருந்து புறப்பட்டு காலை 7:30 மணிக்கு ஆண்டாள் கோயிலுக்கு காரில் வந்தனர். விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் அவர்களை வரவேற்றனர். பின்னர் ஆண்டாள் கோயில், வடபத்ர சாயி சன்னதியில் அவர்கள் தரிசனம் செய்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தரிசனம் செய்த பின் மதுரை சென்றனர்.