வன்னிய பெருமாள் கோவிலில் பிப்.,11ம் தேதி கும்பாபிஷேகம்



புதுச்சேரி: முதலியார்பேட்டை, அலர்மேல்மங்கை சமேத நிவாசப் பெருமாள் தேவஸ்தானம், வன்னியப் பெருமாள் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சன்னதிகள், மகா மண்டபம், ராஜகோபுரம் , புதிய பள்ளியறைபுதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடந்து, இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகம் செய்வதற்கான தேதியை முடிவு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், கோவில் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கோவிலின் கவுரவத் தலைவர் சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். திருப்பணி குழு, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ஊர் மக்கள், முக்கியஸ்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர். இதில், வரும் பிப்ரவரி 11ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்