வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு; திருப்பாவை பாடி வழிபட்ட மாணவர்கள்

31-டிசம்பர்-2025



ரெட்டியார்சத்திரம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கருட வாகனத்தில் சொர்க்கவாசல் வழியே எழுந்தருளினார். முன்னதாக மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு, மலர் அலங்காரத்துடன் விசேஷ ஆராதனைகள் நடந்தது. கருட வாகனத்தில் உள்பிரகார வலம் வருதல் நடந்தது. பின்னர் சொர்க்கவாசல் வழியே, சுவாமி எழுந்தருளல் நடந்தது. விழாவில் வீர ஆஞ்சநேயர், ஹயக்ரீவர், செங்கமலவள்ளி அம்மன், கருடாழ்வார், அனுக்கிரக பைரவருக்கு, விசேஷ பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் அமிர்தா வித்யாலயம் பள்ளி மாணவர்கள், திருப்பாவை பாசுரங்கள் பாடி வழிபாடு நடத்தினர். பள்ளி முதல்வர் முத்துலட்சுமி, தமிழாசிரியர் தமிழ்மணி ஏற்பாடுகளை செய்திருந்தனர். 


* கன்னிவாடி கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


* சின்னாளபட்டி மேட்டுப்பட்டி வெங்கடேசப்பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராமஅழகர் கோயில், கோயில், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 16

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்