பரமக்குடி பெருமாள் கோயிலில் பாரம்பரிய பாகவத கோஷ்டி: பழமை மாறாத பக்தி இசை

01-ஜனவரி-2026



பரமக்குடி; பரமக்குடி கோயில்களில் பழமை மாறாமல் பாகவதர் கோஷ்டியினர் இறைவனை நோக்கி பாடல்கள் பாடி ஆன்மிகத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.


பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் நூற்றாண்டுகளுக்கு முன்பு பஜனை மடமாக இருந்து பின்னர் மிகப்பெரிய கோயிலாக உருவெடுத்துள்ளது. இங்கு மதுரை அழகர் கோவிலை போன்று சித்திரை திருவிழா அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உட்பட அனைத்து விழாக்களும் நடக்கிறது. இதேபோல் மற்றொரு கோயிலான ஈஸ்வரன் கோயில் உள்ளது. சைவம், வைணவத்தை போற்றும் வகையில் சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களால் இக்கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு இன்றளவும் பழமை மாறாமல் மார்கழி மாதத்தில் அதிகாலை 5:00 மணி தொடங்கி, சிவன் மற்றும் பெருமாள் பாடல்களை பாடியபடி கோயில்கள் மற்றும் வீதிகளில் வலம் வருகின்றனர். மேலும் இக்கோயில்களில் வருடம் முழுவதும் நடக்கும் அனைத்து சுவாமி வீதி உலாக்களின் போதும் பாடல்களை பாடுவது குறிப்பிடத்தக்கது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 21

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்